உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னோர் ஆசி தரும் சூரியனார் கோயில்!

முன்னோர் ஆசி தரும் சூரியனார் கோயில்!

பீகாரில், கயாவில் உள்ள தட்சிணார்க்க மந்திர் எனும் இடத்தில், சூரியனாருக்கான கோயில் உள்ளது. ஆதித்யன், வித்தியாசமான ஆடை அமைப்புடன் இடுப்பில் பெல்ட்டும். காலில் நீளமான பூட்ஸ் போன்ற காலணியும் அணிந்து காட்சி தருகிறார். 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு. வாரங்கல் இளவரசர் பல திருப்பணிகள் செய்துள்ளார் எனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்குமாம். இங்கு வந்து, நீத்தார் கடன் செய்தால், முன்னோர் ஆசி கிடைக்கும். சூரிய பகவானின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !