லட்சுமி நரசிம்மர் பீடத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம்!
ADDED :3954 days ago
பவானி : பவானி, காலிங்கராயன்பாளையம், பெரியார் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் பீடத்தில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. நேற்று அதிகாலை, 5.30 மணிக்கு திருபள்ளி எழுச்சியும், 6.30 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை, 8.30 மணிக்கு கூடார வள்ளி பூஜையை, திருவெங்கடராமனுஜதாசன் தலைமையில், ஆண்டாள் குழுவினர், ரங்கமன்னார் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தினர்.மார்கழி 1ம் தேதி முதல், தினமும் பல்வேறு வகையான விஷேச பூஜைகள் செய்து, 27ம் நாள் ஆண்டாள் கூடார வெள்ளி பூஜையை தொடர்ந்து, திருக்கல்யாணம் நடந்தது. குமாரபாளையம் நகராட்சி தலைவர் தனசேகரன், திரூப்பூர் தொழிலதிபர் சுப்ரமணியம், ஜெயம் ஜெகதீசன், கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.