உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை!

கங்கையம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கங்கையம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.கள்ளக்குறிச்சி கங்கையம்மன் கோவிலில் தை மூன்றாம் வெள்ளியைத் தொடர்ந்து சுமங்கலிப் பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்தனர். கோவில் வளாகத்தில் குத்துவிளக்கிற்கு குங்குமார்ச்சனை செய்து, பூஜைகள் நடத்தி 108 பெண்கள் வழிபாட்டில் பங்கேற்றனர். கங்கையம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, எலுமிச்சம்பழ மாலை சார்த்தி, மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை பாலசுப்ரமணியன் குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !