உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பராயன் புதூரில் கும்பாபிஷேகம்!

சுப்பராயன் புதூரில் கும்பாபிஷேகம்!

சோமனுார் : சுப்பராயன்புதுார் சண்முக சுப்பிரமணியர் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

சோமனுார் அடுத்த சுப்பராயன் புதுார் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியர் கோவில் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் பழமை வாய்ந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில், 30ம்தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இரண்டு கால ஹோமத்தை தொடர்ந்து, விமான கலசங்கள் நிறுவப்பட்டன.

நேற்று முன்தினம் மாலை மூன்றாம் கால ஹோமமும், இரவு, 9:00 மணிக்கு முருகர், சவுடேஸ்வரி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்திடப்பட்டது.நேற்று காலை, நான்காம் கால ஹோமம் முடிந்தபின், விமானம், மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டியினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !