உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மறையூர் திருமணத்தி அம்மன் கோவிலில் பிப்., 8ல் கும்பாபிஷேகம்!

மறையூர் திருமணத்தி அம்மன் கோவிலில் பிப்., 8ல் கும்பாபிஷேகம்!

உடுமலை : மறையூர் திருமணத்தி அம்மன் (பந்தல் நாச்சியார்) கோவில், கும்பாபிஷேகம் வரும், 8ம் தேதி நடக்கிறது.

உடுமலை அருகே, மறையூர், மாசிவயலில் அமைந்துள்ளது, திருமணத்தி அம்மன் கோவில். கோவில் கும்பாபிஷேகம விழா, கடந்த மாதம், 19 ம்தேதி, துவங்கியது. அன்று முதல் ஜன., 23 வரை சுவாமி சிலைகளுக்கு, ஜலாதி வாசம் செய்யப்பட்டது. 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, சுவாமி சிலைகளுக்கு, தான்யாதிவாசம் செய்யப்பட்டது. 29ம் தேதி முதல் ஜன., 1ம் தேதி வரை, சுவாமி சிலைகளுக்கு சயனவாசமும் சொர்ணவாசமும் செய்யப்பட்டது.நேற்று, காலை, 6:00 மணிக்கு முகூர்த்தங்கால் நடப்பட்டது.

இன்று முதல் வரும், 6ம் தேதி வரை, சாமி சிலைகளுக்கு சயனவாசமும் சொர்ணவாசமும் செய்யப்படுகிறது.வரும், 7ம் தேதி காலை, 7:00 மணி முதல் 8:00 மணிக்குள், தென்காசிநாதர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை, சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிற்பகல், 3:00 முதல், மாலை, 6:00 மணி வரை, அம்மனுக்கு முளைப்பாரி கலசம், உபயபொருட்கள், சீர் உள்ளிட்டவை சந்தன விநாயகர், சித்தி விநாயகர் மற்றும் அருணாட்சியம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பூஜைகள் நடக்கின்றன; பின், அங்கிருந்து திருமணத்தி அம்மன்

கோவிலுக்கு கொண்டுவரப்படுகின்றன.மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை, விக்னேஸ்வரர் பூஜை, நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேஷம் முதல் கால யாக பூஜை நடக்கிறது. இரவு, 9:00 முதல், 10:30 வரை, சுவாமி சிலைகளுக்கு யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டு, அஷ்ட பந்தனம் நடக்கிறது.

வரும், 8 ம் தேதி காலை, 6:00 முதல் 7:00 மணிக்குள் திருமணத்தி அம்மனுக்கு பால்குடம் அபிஷேகப் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, கோபூஜை, வேதபாராயணம் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

மதியம், 12:00 மணிக்கு, மகா அபிஷேகம், தீபாராதனையும், மதியம், 1:00 மணிக்கு, அன்னதானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !