உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டில்லி துர்கா கோவிலில் முதல்வர் ரேகா குப்தா வழிபாடு

டில்லி துர்கா கோவிலில் முதல்வர் ரேகா குப்தா வழிபாடு

புதுடில்லி; மாத நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, டில்லியில் உள்ள ஜாண்டிவாலன் துர்கா கோவிலில், முதல்வர் ரேகா குப்தா நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார். ஒவ்வொரு மாதமும் வரும் நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான நேற்று, டில்லியில் உள்ள ஜாண்டிவாலன் துர்கா கோவிலுக்கு அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற முதல்வர் ரேகா குப்தா, அந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறும் போது,‘‘டில்லி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காக, துர்கா தேவியிடம் சிறப்பு பிரார்த்தனை செய்தேன். டில்லி மாநகர மக்களுக்கு தேவையான நேர்மறையான சக்தி, அமைதி, முன்னேற்றம் கிடைக்க வேண்டும்,’’ என்றார். முன்னதாக, அந்த கோவிலில் நேற்று நடந்த பஜனை நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !