தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு மயில் காவடி மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம்
ADDED :10 hours ago
அவிநாசி; யுகாதி தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு கருப்பராயன் கோவிலுக்கு தீர்த்தக்காவடி எடுத்துச் சென்று இலந்தை முள் படுக்கையில் பக்தர்களுக்கு அருள் வாக்கு.
அவிநாசி அடுத்த கந்தம்பாளையம் கருப்பராயன், பேச்சியம்மன் கோவிலில் யுகாதி தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர். பின்னர் கருப்பராயன் கோவில் பூசாரி இலந்தை முள் படுக்கையில் படுத்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.