பவுர்ணமி மகா தீபம்!
ADDED :4083 days ago
வானூர்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் தை மாத பவுர்ணமியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
வானூர் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் தை மாத பவுர்ணமியொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் மேல்பிரகாரத்தில் இரவு மகா தீபம் ஏற்றப்பட்டது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் பாலசுப்ரமணிய ராஜன், ஊராட்சி தலைவர் வேணு செய்திருந்தனர்.