உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம் சுரத்குமார் மகராஜின் 14ம் ஆண்டு ஆராதனை விழா

யோகி ராம் சுரத்குமார் மகராஜின் 14ம் ஆண்டு ஆராதனை விழா

திருக்கோவிலூர்: பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 14ம் ஆண்டு ஆராதனை விழா, திருவண்ணாமலையில் வரும், 14ம் தேதி துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் விழாவின் முதல் நாளான, 14ம் தேதி காலை, 6:30 மணிக்கு ஹோமங்கள் மற்றும் அதிஷ்டானத்தில் அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு பஜனையும், 5:45 மணிக்கு உபன்யாசமும் நடக்கிறது. அடுத்த நாள் காலை, 6:30 மணிக்கு மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், மகா தீபாராதனையும், 9:00 மணிக்கு நித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில் தீர்த்த நாராயண பூஜை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு பகவானின் உற்சவ மூர்த்தி, வெள்ளி ரதத்தில் ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !