ஞான விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :3971 days ago
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் ஞான விநாயகர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 6ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 7ம் தேதி காலை 2ம் காலம், மாலை 3ம் காலம், 8ம் தேதி 4ம் காலம் யாகசாலை பூஜைகள், மகா தீபாரா தனை நடந்தது. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு கோவில் விமானம், ஞானநவிநாயகர், சித்தி விநாயகர், சங்கடகர விநாயகர் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிச னம் செய்தனர்.