உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரத்தாழ்வார் கோவிலில் திருக்கல்யாணம்!

சக்கரத்தாழ்வார் கோவிலில் திருக்கல்யாணம்!

கடலூர்: அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில், விஜயவள்ளித் தாயாருக்கு திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. கடலூர் அடுத்த  அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில், விஜயவள்ளித் தாயாருக்கு 11ம் ஆண்டு திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று (17ம் தேதி)  காலை 8:00 மணிக்கு மூலவர் விஜயவள்ளித் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு பெருமாள், தாயார் உள் புறப்பாடு  நடக்கிறது. தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம், பூப்பந்து விளையாட்டு, ஊஞ்சல் சேர்த்தி சேவை, காப்புக் கட்டுதல், பூணுõல் அணிவித்தல், கூரை  சேலை, பட்டு சேலை சமர்ப்பித்து 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !