உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரணீஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம்!

காரணீஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம்!

ஊத்துக்கோட்டை: சிவராத்திரி விழாவை ஒட்டி, பக்தர்களால் சுமந்து வரப்பட்ட, 108 பால்குட அபிஷேகம் மூலவருக்கு நடந்தது.

ஆரணி அடுத்த, காரணி கிராமத்தில் உள்ளது காரணீஸ்வரர் சாந்தலிங்க சுவாமி கோவில். இக்கோவிலில், சிவராத்திரி விழாவை ஒட்டி, அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, 108 ஆண்கள், பெண்கள் பால்குடம் ஏந்திக் கொண்டு கோவிலை அடைந்தனர். பின், அந்த பாலை கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல், வடதில்லை கிராமத்தில் உள்ள பாபஹரேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழாவை ஒட்டி, மூலவருக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது.

பின், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், வடதில்லை, மாம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !