பரதநாட்டியம் ஆடுபவர்கள் பூமியைத் தொட்டு வணங்குவது ஏன்?
ADDED :4280 days ago
சபையை வணங்குதல் என்பது எந்தநிகழ்ச்சியிலும் இடம்பெறும் சம்பிரதாயம் தான். பரதத்தில் இது இன்னும் விசேஷமாக செய்யப்படுகிறது. கைகளைக் கூப்பிவணங்குவதோடு, பணிவாக பூமியைத் தொட்டும் வணங்குவர். நடனம் ஆடும் போது பூமி அதிர நடப்பது, ஆடுவதைத் தவிர்க்க முடியாது. அதற்காக பூமியைத் தொட்டு வணங்குவதால், பொறுமை மிக்க பூமாதேவி நம்மை ஏற்று அருள்கிறாள்.