உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரும்புகைக்கு இவ்ளோ செலவா?

பெரும்புகைக்கு இவ்ளோ செலவா?

புகைபிடிப்பது பல நோய்கள் உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது. இந்நோய் புகை பிடிப்பவரை மட்டுமின்றி, சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கிறது. நோன்பு காலத்தில் கூட சிலர் புகைபிடிப்பதை நிறுத்துவதில்லை. இத்தகைய பழக்கத்தை கட்டாயமாக கைவிட வேண்டும். புகை பிடிப்பது அருவருக்கதக்க பழக்கம் என்கிறது இஸ்லாம். கெட்ட வழக்கங்கள் குறித்து கூறும் குர்ஆன் வசனம் ஹதீஸ் 2:195, உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள் என்கிறது. மற்றொரு ஹதீஸ் 4:29உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம், என்று சொல்கிறது. புகை, உடலுக்கு மட்டுமின்றி, பணத்துக்கும் கேடு விளைவிக்கும் என்பதையும் குர்ஆன் வலியுறுத்திச்சொல்கிறது.ஹதீஸ் 6:141,நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்.நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ்நேசிப்பதில்லை, என்றும், ஹதீஸ் 17:26 நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர், என்றும் சொல்கிறது.புகைக்கும் காசை நீங்கள் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால் அல்லாஹ் உங்கள் மரணத்திற்கு பின்பு, பணத்தை எவ்வாறு சம்பாதித்தாய்?எவ்வழியில் அதனை செலவு செய்தாய்? உனது உடம்பை எதில் அழித்தாய்? என மூன்று கேள்விகளைக் கேட்பான். நல்ல வழியில் வராத பணமே, கெட்ட வழக்கங்களுக்குசெலவழிக்கப்படும். எனவே அல்லாஹ்வின் முன்னிலையில், நமது தவறுகளெல்லாம் வெளிப்பட்டுவிடும்.ஆகவே புகைத்தல், குடித்தல் மற்றும் பிற கெட்டவழக்கங்களையும் கைவிட்டு விடுங்கள். கெட்ட பழக்கத்திற்கு செலவழிக்கும் பணத்தை ஒரு ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள். அது உங்களை அல்லாஹ்வின் அருகில் கொண்டு சேர்க்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !