கடன்காரனும் கெட்டவனே!
‘கெட்டவர் என்றால் யார்?’ என ஒரு கேள்வியை உங்களிடம் வீசினால், ‘பிறர் பணத்தை அபகரிப்பவர்கள், ஏமாற்றுக்காரர்கள், கொலைகாரர்கள், மோசடிக்காரர்கள், பெண்களை ஏமாற்றுபவர்கள்...’ என்று பதிலளிப்பீர்கள். ஆனால், இந்தப் பட்டியலில் இன்னும் சிலர் உள்ளார்கள்.“சுவை மிக்க பானங்கள் அருந்துபவர்கள், சுவை மிக்க உணவு வகைகள் உண்பவர்கள், விதவிதமான ஆடை அணிபவர்கள், அளவுக்கு அதிகமாகப் பேசுபவர்கள், சுகபோகத்திலேயே ஆழ்ந்து கிடப்பவர்கள்’ ஆகியோரும் கெட்டவர்களே என்று நபிகளார் கூறுகிறார்கள். கெட்டவர்கள் வரிசையில் கடன் வாங்கிய நபர்களையும் சேர்த்துள்ளார்கள். “உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஆனால், உங்களுடைய கடன்கள் மன்னிக்கப்படுவதில்லை. இப்பொழுது தான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இதனை என்னிடம் சொல்லிச் சென்றார்கள்” என்கிறார்கள்.மேற்கண்ட வழக்கங்களை உடையவர்கள், இனியாவது தங்கள் செயல்பாட்டைத் திருத்திக் கொள்ள வேண்டும்.