உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் மாசித் தெப்பம்: தாமதமாகும் ஆலோசனைக் கூட்டம்!

திருக்கோஷ்டியூர் மாசித் தெப்பம்: தாமதமாகும் ஆலோசனைக் கூட்டம்!

திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவம் துவங்கியும் விழா ஏற்பாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம் நடக்கவில்லை. திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவர். 11 நாள் நடக்கும் இந்த விழாவில் மூன்று நாட்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். விழாவிற்கு அடிப்படை வசதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிகாரிகளால் நடத்தப்படும். மாவட்ட நிர்வாக தலைமை,அல்லது தாலுகா அளவில் இந்த கூட்டம் நடத்தப்படும். இதுவரை இந்த ஆண்டிற்கான ஆலோசனை கூட்டம் நடக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளா வதும் நடக்கிறது. கூடும் பக்தர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறை,தண்ணீர் வசதி செய்வதில்லை. விளக்கு ஏற்றும் பெண்கள் விபத்தில் சிக்குவதும், பலர் நகைகளை பறி கொடுப்பதும், போக்குவரத்து சிக்கல் உருவாவதும் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த ஆண்டாவது ஆலோசனை கூட்டத்தை நடத்தி பக்தர்களின் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர் பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !