உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுற்றக்கூடாத நவக்கிரகம்!

சுற்றக்கூடாத நவக்கிரகம்!

கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் மீன்சுருட்டியிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் உள்ளது கங்கை கொண்ட சோழபுரம். இங்குள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரக மண்டபம் மற்ற கோயில்களில் உள்ளது போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் எட்டு கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்திருக்க, இத்தேரை, அருணன் ஓட்டுகிறான். தேரிலுள்ள பத்து கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகைச் சுற்றி வருகின்றன. எனவே, அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் சுற்ற முடியாதபடி இந்த நவக்கிரக மண்டப அமைப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !