உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தசாவதாரத் திருக்கோயில்!

தசாவதாரத் திருக்கோயில்!

அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது கோதண்டராமர் கோயில், கோதண்டராமர் கோயில் என்று சொல்லப்பட்டாலும் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாசலபதியே மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் பெருமாளின் பத்து அவதாரங்களையும் தசாவதாரச் சிற்பங்களாக மண்டபத் தூண்களில் ஒருசேரக் காணலாம். அம்பரீஷன் எனும் மன்னன் பெருமாளின் தசாவதாரங்களையும் ஒருசேர தரிசிக்க விரும்ப, அவனுக்கு எம்பெருமான் காட்சி தலம் இது. இன்றும் பறவை வடிவில் இக்கோயில் கோபுரத்தில் அமர்ந்து அம்மன்னன் பெருமாளை தரிசித்து மகிழ்கிறான். அதனைக் குறிக்கும் விதமாக மண்டபத்தின் எதிர்ப்புற கோபுர உள்வாயிலின் மேல் பறவை ஒன்றின் சிலையை வடித்து வைத்திருக்கிறார்கள். திருமணத்தடை நீக்கும் பரிகாரத்தலமாக இது விளங்குகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், துளசி மாலை சார்த்தியும் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !