சுகவனேஸ்வரர் கோவில் உண்டியல் மூலம்ரூ.20.67 லட்சம் வருவாய்
ADDED :3912 days ago
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் உண்டியல் மூலம் 20.67 லட்சம் ரூபாய், 85 கிராம் தங்கம், 710 கிராம் வெள்ளி ஆகியன கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. சேலம், சுகவனேஸ்வரர் கோவில் உண்டியல் எண்ணும் பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டனர். உண்டியலில், 20 லட்சத்து, 67 ஆயிரத்து, 737 ரூபாய், 85 கிராம் தங்கம், 710 கிராம் வெள்ளி ஆகியன வருவாயாக கிடைத்தது.