உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு பகவதி அம்மன்கோயில் உண்டியலில் 9.25 லட்சம் வசூல்

மண்டைக்காடு பகவதி அம்மன்கோயில் உண்டியலில் 9.25 லட்சம் வசூல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இங்கு மாசி கொடை விழா வரும் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்க உள்ள நிலையில் இங்கு உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் மண்டைகாடு தேவசம்போர்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மொத்தம் ஒன்பது லட்சத் 25 ஆயிரத்து 991 ரூபாய், 38 கிராம் தங்கம், 26 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தது. இதில் பத்மனாபபுரம் தேவசம் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோயில் மேலாளர் ஆறுமுகதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !