பொக்காபுரம் கோவிலில் இரண்டு நாள் அன்னதானம்
ADDED :3911 days ago
ஊட்டி : மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில்நடக்கும் தேர் திருவிழாவை முன்னிட்டு, ஊட்டி நீலாம்பிகை சேவா சங்கத்தினர் சார்பில், பக்தர்களுக்கு, இரண்டு நாட்கள் அன்னாதனம் வழங்கப்படுகிறது.வரும் 28ம் தேதி முதல், வரும் மார்ச், 2ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில், கரகம் ஏந்தி வரும் பக்தர்களுக்கும், விழாவினை காண வரும் பக்தர்களுக்கும், காலை, 7:00 முதல், 10:00 மணி வரையும், மாலை, 5:00 முதல், இரவு, 12:00 மணி வரையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை, சங்க பொறுப்பாளர்கள் கண்ணன், ராஜரத்தினம், சுரேஷ்குமார், விஜயகுமார் செய்துள்ளனர்.