கிருஷ்ண கான சபாவில் பன்னிரு திருமுறை இசைவிழா!
ADDED :3887 days ago
சென்னை: வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றமும், ஸ்ரீ கிருஷ்ண கான சபாவும் இணைந்து நடத்தும், 10ம் ஆண்டு, பன்னிரு திருமுறை இசை விழா, இன்று காலை துவங்குகிறது. தி.நகர், ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில், இன்று முதல், வரும், 8ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஓதுவா மூர்த்திகள் பங்கேற்கின்றனர். தேவார இன்னிசை, பட்டிமன்றம், புலவர்களின் சொற்பொழிவு, உபன்யாசம், ஹரிகதை, இசை சொற்பொழிவு போன்றவை நடக்க உள்ளன. சனி, ஞாயிற்று கிழமைகளில், காலை, 8:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையும், மற்ற தினங்களில் மாலை, 3:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையும், இசை விழா நடைபெறும். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு, 92821 21798 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.