உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருச்சி ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருச்சி: சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று காலை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில், சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் தேரோட்ட விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 23ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், குதிரை வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை, 9.35 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் தென்ன ரசு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !