மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கும்ப படையல்!
ADDED :3886 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாசி தேர் திருவிழாவின் கடைசி நாளில் கும்ப படையல் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாசி பெருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி மயானக் கொள்ளை, 21ம் தேதி தீமிதி விழா, 23ம் தேதி தேரோட்டம், 26ம் தேதி தெப்பல் உற்சவம் நடந்தது. விழாவின் நிறைவாக 1ம் தேதி மஞ்சள் நீராட்டு, பேய் மேடை மீது கும்ப படையல், இரவு சுவாமி வீதியுலா, காப்பு களைதல் நடந்தது. அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல், அறங்காவலர்கள் ஏழுமலை, காசி, சரவணன், பெருமாள், சின்னதம்பி, சேகர், மேலாளர் முனியப்பன், மணிகலந்து கொண்டனர்.