மேலக்குமாரசக்கனாபுரம் கோயிலில் கும்பாபிஷேக விழா
புதூர் : புதூர் அருகே உள்ள மேலக்குமாரசக்கனாபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மஹாகும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் விக்னேஷ்வர பூஜை, புன்யாவாசனம், மிஸ்ஸங்கரணம், பாலிகைத்தெளிப்பு, கலசாசனம், ஹோமங்கள், மஹாபூர்ணாஹூதி, கடம் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூமாதேவி, சமேத வரதராஜப்பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியன நடந்தது. நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்எல்ஏ., மார்க்கண்டேயன், மணியக்காரன்பட்டி பஞ்.,தலைவர் பெருமாள்சாமி, பந்தல்குடி ராம்கோ நிறுவன நிர்வாகிகள், அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பெ õதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மேலக்குமாரசக்கனாபுரம் கிராம பெ õதுமக்கள் செய்திருந்தனர்.