உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயர்ந்த வலப்பக்கம்!

உயர்ந்த வலப்பக்கம்!

நீங்கள் செருப்பு போடுகிறீர்களா? முதலில் வலது காலில் அணியுங்கள். இடது காலால் கழற்றுங்கள். நீங்கள் ஆடை அணிகிறீர்களா? வலது புறத்தில் இருந்தே ஆரம்பியுங்கள், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். ஒருமுறை நாயகம்(ஸல்) அவர்களுக்கு தண்ணீர் கலந்த பால் கொடுக்கப்பட்டது. அவரது வலப்புறத்தில் தோழர் ஒருவரும், இடப்புறம் மற்றொரு தோழரும் அமர்ந்திருந்தனர். நபிகளார் வலப்புறம் இருந்த தோழருக்கு பாலைக்கொடுத்துவிட்டு வலது வலது தான் என்றார்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவன் வானவர் களும் ஸஃப்புகளின் (தொழுகைக்கான வரிசை) வலதுபுறம் உள்ளவர்கள் மீது ஸலவாத்து கூறுகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிகின்றான். வானவர்கள் அவர்களுக்காக துஆ செய்கின்றனர், என்றும் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். இனி வலதுபக்கத்துக்கு நாம் முக்கியத்துவம் தருவோமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !