அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவம்!
ADDED :3861 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வரும் 10ம் தேதி துவங்குகிறது. அதனையொட்டி, அன்று அதிகாலை 4:00 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 11ம் தேதி அங்காளம்மன் சிம்ம வாகனத்திலும், பாவாடைராயன் குதிரை வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 12 ம்தேதி முதல் தினமும் அபிஷேக ஆராதனை, அம்மன் வீதியுலா நடக்கிறது. 19ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. 20ம் தேதி மயானக் கொள்ளை திருவிழா நடக்கிறது.