உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயுளை நீட்டிக்கும் ஓர் அற்புத வழி!

ஆயுளை நீட்டிக்கும் ஓர் அற்புத வழி!

நீண்டநேரம் உழைத்துக் களைத்த கணினி. தானாக நின்றுவிடுவது உண்டு. சிறிதுநேரம் நிறுத்திவிட்டு மீண்டும் இயக்கினால் வேலை செய்கிறது. அது போல், உழைத்துக் களைத்த மனம் என்ற கணினிக்குத் தரும் ஒரு தற்காலிக ஓய்வே தியானம். வெளியே நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும்  ஐம்புலன்களின் ஓட்டத்தை உள்நோக்கித் திருப்பும் ஓர் உள்நோக்கியே பயணமே தியானம். தியான முயற்சியின் வெற்றிக்குச் சில அடிப்படைப்  பக்குவங்கள் தேவை. உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், பக்தியுடன் கூடிய ஆர்வம். குருவின் மொழியில் விசுவாசம் என்பவையே அந்தப் பக்குவ ங்கள். இந்தப் பக்குவங்கள் இல்லாத தியானம் முழு வெற்றியை வழங்காது. காலை உணவாக இளநீர், பதநீர், நுங்கு, பழங்கள், என இயற்கை  உணவை உண்ண வேண்டும். சமைத்த உணவில் முடிந்தவரை உப்பு, காரம், புளிப்பு, எண்ணெய் குறைவாக இருத்தல் நலம். அசைவ உணவு ஆகவே  ஆகாது. புகையிலை, மது உள்ளிட்ட போதைப் பொருள்களும் ஆகாது. இவையே உடல் ஒழுக்கம் ஆகும்.

பொய், பொறாமை, வஞ்சனை, கொடிய தொழில் செய்யும் பழக்கம், ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் தந்திரம், விகாரமான காமம் போன்ற மன  ஒழுக்கக் கேடுகள் இல்லாமல் இருத்தல் நலம். மன அழுத்தம் (கூஞுணண்டிணிண ) கோபம், வேதனை, சோகம், குழப்பம், போன்ற எதிர்வினைகளில்  சிக்கியுள்ள மனம் தியானத்தில் ஒடுங்கச் சற்றுத் தாமதம் ஆகும். ஒடுங்கிவிட்டால் மேற்கண்ட எதிர்வினைத்தாக்கம் மறைந்துவிடும். தியானத்தின்  முதற்கட்டம் சும்மா இருத்தல்தான். கண்களைப் புருவமத்தியில் கட்டி வேடிக்கை பார்த்தப்படி சும்மா இருப்பது . உடலில் தோன்றும் உணர்ச்சிகளைக்  கவனிப்பது. காதில் விழும் ஒலிகளைக் கவனிப்பது, மூக்கில் ஓடும் மூச்சைக் கவனிப்பது. மனத்தில் ஓடும் எண்ணங்களைக் கவனிப்பது. தியானத்தில்  இரண்டாம் கட்டம் ஒருமைப்பட்ட மனத்திற்குள் விரும்பும் தெய்வங்கள், மகான்களை நிறுத்தி வணங்குவது. விரும்பும் வெற்றிகளை வேண்டிய  பெறுவது. பஞ்சபூதங்களை வணங்கி அவற்றுடன் ஐக்கியம் ஆவது. சூரியபகவான் தலைமையில் இயங்கும் நவகிரகங்களை வணங்கி அவற்றை  அனுகிரகங்களாக மாற்றுவது. ஐந்து மூர்த்திகளாகிய பிரம்ம-சரஸ்வதி, மகாவிஷ்ணு-மகாலட்சுமி, ருத்ரன்-பார்வதி, மகேஸ்வரன்-மகேஸ்வரி,  சதாசிவம்-மனோன்மணி ஆகிய தெய்வங்களை வணங்கி நல்லாசி பெறுவது. அன்னை வாலை பரமேஸ்வரி அன்னை வாலை புவனேஸ்வரி, கால  பைரவி, வராகி போன்ற சித்துக்களுக்குரிய தேவதைகள் வணங்கிச் சித்துகள் பெறுவது. வாசியோகம் பழகி முறையாய்ச் செய்வோர்க்குச் சித்துக்கள்  வாய்க்கும், இப்படி தியானம் என்பது தேவையையும் விருப்பத்தையும் பொறுத்தப் பல வகையாய் விரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !