உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எப்போதும் ஆனந்தம்!

எப்போதும் ஆனந்தம்!

கைலாயத்தில் சிவபார்வதியைதரிசிக்க மாங்கனியோடு வந்தார் நாரதர். அந்த கனியைப் பெற்ற சிவன் தன் பிள்ளைகளிடம், உலகை முதலில் வலம்  வருபவருக்கே இந்த மாங்கனி என போட்டி வைத்தார். அம்மையப்பரே உலகம் என்று வலம் வந்த விநாயகருக்கு பழத்தை சிவன் வழங்க, மயிலில்  உலகை வலம் வந்த முருகன் கோபித்துக் கொண்டு ஆண்டியானார். பின்னர், சிவபார்வதி தேடி வந்து சமாதானப்படுத்தினர். கோபம் தணிந்த முருகன்  பெற்றோருடன் ஒன்று சேர்ந்தார். சிவபார்வதி முருகனோடு இருக்கும் கோலத்திற்கு சோமாஸ்கந்தர் என்று பெயர். இதனை சச்சிதானந்தம் என்றும்  சொல்வர். சத் என்பது சிவனையும், சித் என்பது பார்வதியையும், ஆனந்தம் என்பது முருகனையும் குறிக்கும். சோமாஸ்கந்தரை வணங்கினால்,  குடும்பம் ஒற்றுமையுடன் ஆனந்தமயமாய் விளங்கும். விழாக் காலத்தில் வீதியுலாவாக எழுந்தருள்பவர் சோமாஸ்கந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !