கும்பம்: (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நிறைவான வாழ்வு!
வெள்ளை மனம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
சுக்கிரனின் ஆதரவு மாதம் முழுவதும் சிறப்பாக இருக்கும். செவ்வாய் மார்ச் 21ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். கடவுளின் கருணையால் நிறைவான வாழ்வு அமையும். செயலில் வெற்றி உண்டாகும். பண பலம் அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் பாதிப்பு உண்டாகாது. குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். கணவன், மனைவி இடையே பாசபந்தம் உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு மழலைச் செல்வம் வாய்க்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். மார்ச் 18,19ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். மார்ச் 21க்கு பிறகு, புதிய சொத்து வாங்க யோகமுண்டு.
தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காணலாம். ஏப். 6 க்குப் பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் 29,30,31 தேதிகளில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மார்ச் 21க்கு பிறகு கடினமாக உழைக்க வேண்டிஇருக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும்.
அரசியல்வாதிகள் உழைப்புக்கேற்ப வளர்ச்சியும், நன்மையும் பெறுவர்.
மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேறுவர். தேர்வைத் திறம்பட எதிர்கொள்வர். பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்று முன்னேறுவர்.
விவசாயிகளுக்கு பொருளாதாரத்தில் எந்த குறையும் இருக்காது. கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் உண்டாகும். விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான நிலை பெறுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். மார்ச் 22,23,24 தேதிகளில் ஆடை, அணிகலன் வாங்கலாம்.
நல்ல நாள்: மார்ச் 15, 18, 19, 22, 23, 24, 29, 30, 31 ஏப். 1, 2, 8, 9, 10, 11
கவன நாள்: ஏப். 3, 4, 5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5, 6 நிறம்: சிவப்பு, வெள்ளை
வழிபாடு: வியாழனன்று தட்சணாமூர்த்தி, சனியன்று பெருமாளை வழிபடுங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். துவரை தானம் செய்யுங்கள்.