உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு திருவிழாவில் சக்கரதீவட்டி ஊர்வலம்!

மண்டைக்காடு திருவிழாவில் சக்கரதீவட்டி ஊர்வலம்!

நாகர்கோவில்: மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் மாசி கொடைவிழாவையொட்டி நடைபெற்ற சக்கர தீவட்டி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசி கொடை விழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடல் குளித்து அம்மனை வழிபடுவது இக்கோயிலின் சிறப்பாகும்.

ஒன்பதாம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெற்றது. தேர் போன்ற சக்கர வேண்டியில் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள வளையத்தில் 51 தீபங்கள் ஏற்றி அதன் நடுவில் விரதமிருந்த பக்தர்கள் நிற்பர். பக்தர்கள் தேவியை துதித்த படி அந்த தேரை கோயிலை சுற்றி இழுத்து வருவர். சக்கர தீவட்டிக்கு பின்னால் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !