உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளுவர் கோயில் குருபூஜை!

திருவள்ளுவர் கோயில் குருபூஜை!

காரியாபட்டி:காரியாபட்டி பி.புதுப்பட்டியில் அய்யன் திருவள்ளுவர் கோயில் 85வது குருபூஜை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது. மகாகணபதி ஹோமம், கோ பூஜை,யாகசாலை பூஜை, திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

புதிதாக கட்டப்பட்ட மணிமண்டபத்தை ராம்கோ நிறுவன பொது மேலாளர் வெங்கட்ராமன்திறந்து வைத்தார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக, குண்டாற்றில் சக்தி கரகம் எடுத்து சுவாமி சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து, அலங்கார ரதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், பொது மருத்துவ முகாம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கலை நிகழ்ச்சிகள்நடந்தன. ஊராட்சி தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெய்கணேஷ், செம்மொழி காந்திநாயனார், கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் முருகேசன், சுப்பையா, முத்துச்சாமி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !