பால விநாயகர் கோவிலில் 3ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :3900 days ago
ஈரோடு : ஈரோடு தாலுகா கொந்தளம் கிராமம் குமரப்பபுரம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 3ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, 2ம் தேதி காலை, 4 மணிக்கு கணபதி வழிபாடு, சங்கல்பம், பஞ்சகவ்யம், கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.காலை, 10 மணிக்கு காவிரி நதியில் தீர்த்தம் எடுத்து வர செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை ஐந்து மணிக்கு கணபதி வழிபாடு, வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், முதல் கால யாக வேள்வி, வேதிகா அர்ச்சனை, துவார பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்டவை நடக்கிறது.வரும், 3ம் தேதி காலை, ஆறு மணிக்கு மேல் கோபுர கலச கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம், தச தரிசனம், தசதானம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாரம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை தாமரைப்பாளையம் பாலு நடத்தி வைக்கிறார்.