உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சன்கோயில் ஐயப்பன் கோயிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேக விழா

அச்சன்கோயில் ஐயப்பன் கோயிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேக விழா

தென்காசி : அச்சன்கோயில் ஐயப்பன் கோயிலில் வரும் ஜூலை 7ம் தேதி அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது. கேரள மாநிலம் அச்சன்கோயிலில் அரசன் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கன்னி மூல கணபதி, நாகர், கிருஷ்ணர், மாரியபுரத்தம்மன் உள்ளிட்ட சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பரிவார தெய்வங்களின் பிரதிஷ்டை மற்றும் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 7ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு ஜூலை 2ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. அன்று காலையில் ஆச்சார்ய வர்ணம், கோ தானம், புஞ்ச புண்யாகம், கணபதி ஹோமம், 25 கலசம், பஞ்சகவ்யம், மதியம் பூஜை, மாலையில் அம்குர பூஜை, பிரஸாத சுத்தி, கணபதி பூஜை, ரக்ஷகலசம், ர÷க்ஷõக்ன ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், வாஸ்து பலி, கலசாபிஷேகம், வாஸ்து புண்யாகம் நடக்கிறது. இரண்டாம் நாளான 3ம் தேதி காலையில் கணபதி ஹோமம், சுதாசுத்தி தாரா, பஞ்சகம், பஞ்சகவ்யம், அம்குர பூஜை, கலச பூஜை, கலசாபிஷேகம், மாலையில் அம்குர பூஜை நடக்கிறது. மூன்றாம் நாளான 4ம் தேதி காலையில் கணபதி ஹோமம், அம்குர பூஜை, சுக்ரிதா ஹோமம், கலச பூஜை, கலசாபிஷேகம், மாலையில் அம்குர பூஜை நடக்கிறது. நான்காம் நாளான 5ம் தேதி காலையில் கணபதி ஹோமம், அம்குர பூஜை, பிராயசித்த ஹோமம், கலசம், 25 கலசம், கலசாபிஷேகம், மாலையில் அம்குர பூஜை, இரவு பூஜை நடக்கிறது. ஐந்தாம் நாளான 6ம் தேதி காலையில் கணபதி ஹோமம், அம்குர பூஜை, தத்துவ ஹோமம், தத்துவ கலசம், கலசாபிஷேகம், 25 கலசம், மரப்பாணி, ஜீவகலச பூஜை, மதியம் பூஜை, மாலையில் சயன பூஜை, கும்பேஷகக்கரி பூஜை, பிரம்ம கலச பூஜை, அதிவாஸ ஹோமம், அதிவாஸ பூஜை நடக்கிறது. ஆறாம் நளான 7ம் தேதி காலையில் கணபதி ஹோமம், மரப்பாணி வாத்திய கோஷத்தோடு திருவீதி எழுந்தருளல், பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் சிறப்பு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !