வேம்பு மாரியம்மன் கோவில் சித்திரை விழா
கரூர் : கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில், 12ம் ஆண்டு சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. வரும், 15ம் தேதி வரை, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நிகழ்ச்சியாக, நேற்று காலை, 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை, 6 மணிக்குள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.இன்று, (7ம் தேதி) மாலை, 5 மணி முதல் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 10ம் தேதி காலை, 5 மணி முதல் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது. 11ம் தேதி இரவு, 7 மணிக்க இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 12ம் தேதி காலை பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. 13ம் தேதி காலை, பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வருதலும், 14ம் தேதி பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துவருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் திரு வீதியுலா நடக்கிறது. மறுநாள், மாலை, 6 மணிக்கு கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.