உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ­­­பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி விழா கோலாகலம்!

­­­பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி விழா கோலாகலம்!

வாலாஜாபாத்: படுநெல்லி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவப் பெருவிழா கோலாகலமாக நடந் தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த மாதம் 28ம் தேதி  பங்குனி உத்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நிறைவு நாளான, நேற்று முன்தினம் இரவு, திருக்கல்யாண உற்சவ வைபவம்  நடந்தது. இந்த திருக்கல்யாண உற்சவ வைபவத்தை முன்னிட்டு, நேற்று மாலை 6:00 மணி அளவில், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தன.  இரவு 9:15 மணி அளவில், பிரசன்ன வெங்க டேச  பெருமாள் மலர் அலங்காரத்தில், மணமேடையில் எழுந்தருளினார். சிறப்பு ஹோமங்களுக்கு பின்  பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. படுநெல்லி கிராமத்தை சுற்றி உள்ள கிராம ங்களைச் சேர்ந்த பக்தர்கள், பிரசன்ன வெங்கடேச பெருமாளை வணங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !