உயிர்களுக்கு அருள் செய்யும் வகையில் இறைவனாகிய தலைவன் புரியும் பேரருள்
ADDED :3844 days ago
ஒன்றாகி நின்றசிவ மதுபரா சக்தியெனும்
உருவங்கொ டிருவ டிவதாய்
ஒருமூன்று தேவராய் நான்மறைப் பொருளாகி
உயர்பஞ்ச மூர்த்தி யாகிக்
குன்றாத ஆதாரம் ஆறாகி ஏழெனக்
கொளும்வியா கிருதி மனுவாய்க்
குலவட்ட மூர்த்தியாய் எண்குணம தாய்ப்பரங்
கொண்டநவ தத்து வமதாய்
இன்றாகி அன்றாகி எதிர்கால வடிவாகி
எங்கும்வி யாபி யாகி
எல்லா உயிர்க்கும் உயி ரதுவாகி யருளிநின்று
இயலுலகம் உயநி னைந்தே
சென்றாதி பரவெளி பழுத்தருட் கனிந்தநின்
செயல்சிறிது உரைக்க எளிதோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.