உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை புனரமைப்பு பணி!

விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை புனரமைப்பு பணி!

விழுப்புரம்: லட்சதீபம் பெருவிழாவை யொட்டி விழுப்புரத்தில், விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு புனரமைப்பு பணிகள் நடக்கிறது. லட்சதீப  பெருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் அமைந்துள்ள, 90 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 9ம் ஆண்டு,  பாலாபிஷேகம், நாளை (14ம் தேதி) நடக்கிறது. பாலாபிஷேகத்தை அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு துவக்கி வைக்கிறார். இதையொட்டி ஆஞ்சநேயர்  சிலைக்கு பெயிண்ட் அடித்தல் மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இடிதாங்கி வைக்கும் பணிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சிலை  நிறுவனர் தனுசு செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !