சிறுகடம்பூர் விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை!
செஞ்சி: நல்லாண்பிள்ளை பெற்றாள் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்ச தீப விழா நடந்தது. செஞ்சி தாலுகா நல்லாண் பிள்ளை பெற்றாள் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டு விழா 13ம் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்த ஆஞ்சநேயர் இளைஞர் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடந்தது. இரவு 12 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் மற்றும் பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து 14ம் தேதி மாலை 5 மணிக்கு திவ்யபிரபிந்த பஜனையும், 6 மணிக்கு லட்ச தீபமும் நடந்தது. விழாக் குழுவினர் இன்பசேகரன், ஆகியோர் லட்ச தீபத்தை துவக்கி வைத்தனர். இரவு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி சிறுகடம்பூர் சக்தி விநாயகர் கோவில் மற்றும் செஞ்சி கோட்டை ராஜசெல்வ விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. மாலை 6 மணிக்கு ராஜ செல்வ விநாயகர் கோவிலில் லட்ச தீப வழிபாடு நடந்தது.