கோதண்டராமர் கோவிலில் லட்சதீபம்!
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஆஞ்சநேய சுவாமிகளுக்கு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. வேணுகோபால சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். தொடர்ந்து தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவிலில் லட்சதீப விழாவையொட்டி ஆஞ்சநேய சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மாணவியர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பாண்டுரங்கன், பரிஷத் ஆகியோர் செய்திருந்தனர்.