செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் மகா சத சண்டியாகம்!
ADDED :3830 days ago
சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தமிழ்புத்தாண்டை முன்னிட்டு, மகா சத சண்டியாகம் நேற்று துவங்கியது. இந்த யாக பூஜை வருகிற 17ம் தேதி வரை நடைபெறுகிறது. மகா சத சண்டியாக நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.