உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே பாடலில் திருமாலின் பத்து அவதாரம்!

ஒரே பாடலில் திருமாலின் பத்து அவதாரம்!

மீனோடு ஆமை கேழல் அரி
குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த்
தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னைக் கண்ணபுரத்து
அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை
செப்பப் பாவம் நில்லாவே

மீன்    - மச்சாவதாரம்
ஆமை    - கூர்மாவதாரம்
கேழல்    - வராக அவதாரம்
அரி     - நரசிங்க அவதாரம்
குறள்    - வாமன அவதாரம்
முன் இராமன்     - பரசுராமன்
தான்    - தசரதராமன்
பின் இராமன்    - பலராமன்
தாமோதரன்    - கிருஷ்ணன்
கல்கி    - கல்கி அவதாரம்
இப்படி பகவான் எடுத்த பத்து அவதாரங்களையும் ஒரே பாட்டில் விவரித்துப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !