திரவுபதி அம்மன் கோவில் 36ம் ஆண்டு மஹாபாரத விழா
ADDED :3872 days ago
காரிமங்கலம்; காரிமங்கலம் யூனியன், பேகாரஹள்ளி பஞ்சாயத்தில் திரவுபதி அம்மன் கோவிலில், 36ம் ஆண்டு மஹாபாரத விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி, போச்சம்பள்ளி லட்சுமணன் பாகவாதர் குழுவினரின் நாடக சொற்பொழிவும், இரவு, 9 மணிக்கு ராதாகிருஷ்ணன் குழுவினரால் மஹாபாரதம் நாடகம் நடந்து வருகிறது. வரும், 4ம் தேதி நாடகத்தின் இறுதியாக, 18ம் நாள் போர் நிகழ்ச்சி நடக்கிறது. பேகாரஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, வங்கி தலைவர் பொன்னுவேல் துவக்கி வைத்தார். பஞ்சாயத்து தலைவர் பரசுராமன், கவுன்சிலர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் தனபால், முன்னாள் தலைவர் சம்பத், கோவில் தர்மகர்த்தா மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.