உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

உத்திரமேரூர்: சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, பல்வேறு உற்சவங்கள் நடந்து வருகின்றன. 7ம் நாளான நேற்று, அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி சுந்தர வரதராஜ பெருமாள், காலை 6:00 மணிக்கு எழுந்தருளினார்.அதை தொடர்ந்து, அங்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தன. 7:00 மணிக்கு பக்தர்கள், சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய தெருக்களில் வலம் வந்த சுவாமியை, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !