வித்யா கணபதி, நவக்கிரக கோவில் கும்பாபிஷேகம்!
பெரம்பலூர் : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள வித்யா கணபதி, நவக்கிரக கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, மே, 9ம் தேதி காலை, 8.30 மணிக்கு மேல் தேவதா அனுக்ஞை, விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை, சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை, 5 மணிக்கு மேல் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜையும் நடந்தது.
நேற்று காலை, 5 மணிக்கு மேல் சூர்ய பூஜை, தீபாராதனையும், 8 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 8.15 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பாடு, 8.30 மணிக்கு விமானம் மஹா கும்பாபிஷேகமும், 9 மணிக்கு மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன், செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர்கள் கதிரவன், அனந்தலட்சுமி, இயக்குனர்கள் மணி, பூபதி, நிதி அலுவலவர் ராஜசேகர், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.