உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் வைகாசி பிரதிஷ்டை தின பூஜை!

சபரிமலையில் வைகாசி பிரதிஷ்டை தின பூஜை!

சபரிமலை: வைகாசி மாத பூஜை மற்றும் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும், 14 மற்றும் 28ம் தேதிகளில் இரண்டு முறை திறக்கப்படுகிறது.

வைகாசி மாத பூஜை மற்றும் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை நடை மே 14, 28ல் இரண்டு முறை திறக்கிறது. வைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதி மாலை 5.30க்கு நடை திறக்கிறது. அன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். 15ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிஷேகம் தொடங்கி வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19ம் தேதி வரை தினமும் இரவு ஏழு மணிக்கு படி பூஜை நடைபெறும். 19ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

அதன் பின்னர் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக 28ம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். அன்று வேறு எந்த பூஜைகளும் கிடையாது. 29ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !