உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையாருக்கு வைகாசி அமாவாசையை முன்னிட்டு, 3,000 லிட்டர் பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி அமாவாசையை முன்னிட்டு, அண்ணாமலையார் உற்சவ மூர்த்திக்கு, சாஸ்திரிகள் சங்கம் சார்பில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கும். இதேபோன்று இந்த ஆண்டும், வைகாசி அமாவாசையை முன்னிட்டு, நேற்று, 3,000 லிட்டர் பால், தயிர், 5,000 லிட்டர் கரும்பு சாறு, 500 இளநீர், சந்தனம், விபூதி என, 108 மூலிகை பொடிகள் ஆகியவற்றால், காலை, 6 மணி முதல், மதியம், 12மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்து. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !