வாலு பசங்களுக்கு சபாஷ்!
ADDED :3826 days ago
சில குழந்தைகள் சேஷ்டை செய்து விட்டு புத்திசாலித்தனமாக தப்பி விடுவார்கள். அவர்களை ‘நீ சரியான வாலு’ என செல்லமாக கடிந்து கொள்வது வழக்கம். இதே போல புராணத்திலும் ஒரு ‘வாலு’ இருந்தார். ராமர் வனத்திற்கு சென்றபின் ஆஞ்சநேயர் அவருடனேயே இருந்து சேவை செய்தார். இலங்கை சென்றதும், அவரது வாலில் அசுரர்கள் தீ வைத்தனர். புத்திசாலியான அவர், அந்த தீயைக் கொண்டு அந்த நாட்டையே எரித்தார். ஐயோ! நாம் வைத்த தீ நம்மையே எரித்து விட்டதே என்று அசுரர்கள் வருத்தப்படும் படியான சூழ்நிலையை உருவாக்கி விட்டார். தங்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தைக் கூட, தனக்கு இழைத்தவர்கள் மீதே திருப்பி விடுபவர்களைத் தான்‘வாலு பசங்க’ என்றனர்.