பழண்டிமாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம்!
ADDED :4117 days ago
திருபுவனை: திருபுவனை பழண்டிமாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, காலை 8:00 அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், 11:30 தீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு வள்ளி தெய் வானை முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 7.00 மணிக்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலி த்தார். திருபுவனை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.