ராமேஸ்வரத்தில் தீர்த்த கட்டண விபரபலகை அமைப்பு
ADDED :5208 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தீர்த்த கட்டணம் குறித்த டிஜிட்டல் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடிவிட்டு, கோவில் தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாடுகின்றனர். தீர்த்தமாட, 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுபவர்கள், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. ராமேஸ்வரத்தில் மூன்று இடங்களில், 1.5 லட்சம் செலவில் டிஜிட்டல் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் தீர்த்தமாடுவதற்குரிய கட்டணம், பூஜைக்குரிய கட்டணம் குறிக்கப்பட்டுள்ளன. இத்தகவல் பலகைகள் கோவில் அலுவலகம், சேது மண்டபம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.